காணொளி: இரான் போரால் பாதிக்கப் போகும் 6 அத்தியாவசிய தேவைகள்

காணொளிக் குறிப்பு, இரான் போரால் பாதிக்கப் போகும் 6 அத்தியாவசிய தேவைகள்
காணொளி: இரான் போரால் பாதிக்கப் போகும் 6 அத்தியாவசிய தேவைகள்
பிரசுரிக்கப்பட்டது

இரான் போர் தீவிரமடைந்து வருகிறது. முக்கிய கடல் வர்த்தக பாதையான ஹோர்முஸ் நீரிணை வழியே கப்பல் போக்குவரத்து கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், கச்சா எண்ணெய், உர விநியோகம் உட்பட பல அத்தியாவச பொருட்கள் விநியோகம் தடைபட்டுள்ளது.

இந்தியா முழுவதும் பரவலாக வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த போர் இந்தியா உட்பட தெற்காசியாவை எப்படி பாதிக்கும் என பார்க்கலாம்.

கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ள நிலையில் அன்றாட வாழ்க்கை அதிக செலவுமிக்கதாக மாறி வருகிறது.

இரானில் நடக்கும் போர் இனி தொலைதூர மோதல் மட்டுமல்ல, நம் வீட்டு சமையலறைகளுக்குள்ளும் தாக்கத்தை ஏற்படுத்த தொடங்கியுள்ளது.

தெற்காசியா முழுவதும் விலை உயர்வால் பாதிக்கப்படவுள்ள ஆறு அத்தியாவசியத் தேவைகளை பற்றி பார்ப்போம்.

இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு