யுக்ரேன் குடியிருப்பு கட்டடத்தை ரஷ்ய டிரோன் தாக்கும் காட்சி (காணொளி)
யுக்ரேன் குடியிருப்பு கட்டடத்தை ரஷ்ய டிரோன் தாக்கும் காட்சி (காணொளி)
பிரசுரிக்கப்பட்டது
யுக்ரேன் குடியிருப்பு கட்டடத்தை ரஷ்ய டிரோன் தாக்கும் காட்சி இது.
கட்டட இடிபாடுகளுக்கு அடியில் சிக்கிய மக்களை மீட்புக் குழுக்கள் மீட்டு வருகின்றனர்.
இதில், குறைந்தது 10 பேர் பலியாயினர் எனவும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் எனவும் அதிகாரி தெரிவித்தார்.
"நான் அதைக் கேட்டேன், அந்த சத்தம் அருகில் கேட்க, நானும் என் மனைவியும் அறையை விட்டு வெளியே ஓடினோம். அப்போதுதான், தாக்குதல் நடந்தது." என்கிறார், கியவில் வசிக்கும் வளேரி.
"நாங்கள் பூனையுடன் அறையில் இருந்தோம். திடீரென எல்லாம் எங்கள் மேல் சரிந்து விழுந்தது. எங்களால் இடிபாடுகளுக்கு அடியில் இருந்து வெளியே வரவே முடியவில்லை." என்கிறார் கியவ் சேர்ந்த லியுபோவ்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



