You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அமெரிக்கா அறிவித்த பரஸ்பர வரி விதிப்புக்கு சீனா பதிலடி என்ன?
தங்களுக்கு எதிராக அமெரிக்கா அறிவித்த பரஸ்பர வரி விதிப்புக்கு சீனா பதிலடி கொடுத்துள்ளது.
அமெரிக்காவுக்கான சீன தூதரகம் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "போர்தான் அமெரிக்காவுக்கு தேவையென்றால், அது வரிப் போர் ஆகட்டும், வர்த்தகப் போர் ஆகட்டும் அல்லது வேறு எந்தவித போர் ஆகட்டும், கடைசிவரை போரிட நாங்கள் தயாராக இருக்கிறோம்" என கூறப்பட்டுள்ளது.
மேலும், டி ரம்பின் கூடுதல் வரிவிதிப்புகளுக்கான எதிர்நடவடிக்கையாக, சீனாவுக்கு அமெரிக்கா ஏற்றுமதி செய்யும் பல்வேறு விவசாய பொருள்களுக்கு கூடுதல் வரியை சீனா விதித்துள்ளது. அதன்படி, கோழி இறைச்சி, கோதுமை, சோளம் போன்றவைக்கு கூடுதலாக 15 சதவீத வரியும், சோயாபீன்ஸ், பன்றி இறைச்சி, மாட்டிறைச்சி போன்றவைக்கு கூடுதலாக 10 சதவீத வரியையும் சீனா அறிவித்துள்ளது.
முன்னதாக, சீனா, இந்தியா, மெக்ஸிகோ கனடா உள்ளிட்ட நாடுகள் அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரி விதிப்பதாக கூறி இந்த நாடுகளுக்கு எதிரான பரஸ்பர வரிவிதிப்பை டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் அறிவித்திருந்தார்.
கூடுதல் விவரங்கள் காணொளியில்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)