You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பாகிஸ்தானில் செயற்கை நுண்ணறிவு தொகுப்பாளர் நடத்தும் விவாத நிகழ்ச்சி
பாகிஸ்தானில் செயற்கை நுண்ணறிவு மாடல் கொண்டு தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. இது தான் உலகிலேயே முதல் முறையாக இது போன்ற விவாத நிகழ்ச்சி நடைபெறுவதாகும் என அந்த நிறுவனம் கூறுகிறது.
டிஸ்கவர் பாகிஸ்தான் எனும் தொலைக்காட்சி, தங்கள் ஊடகத்தில் உள்ள நெறியாளரை போலவே செயற்கை நுண்ணறிவு மாடலை உருவாக்கியுள்ளது. இந்த மாடல், 700 விதமான முகபாவனை மற்றும் உடல் அசைவுகளைச் செய்ய முடியும். இதற்கான குரலும் உருவாக்கப்பட்டது.
மேலும் நிபுணர்கள், ஆய்வாளர்கள், சிறப்பு விருந்தினர்கள் உட்பட 30 செயற்கை நுண்ணறிவு மாடல்களை இது போல உருவாக்கப்பட்டுள்ளன. அவர்களுக்குள்ளாகவே கேள்விகள் கேட்டு, விவாதித்துக் கொள்ளும் திறன் கொண்டவை. சாட் ஜிபிடி, கூகுள் போன்ற தளங்களிலிருந்து இவை தகவல்கல் திரட்டுகின்றன.
செயற்கை நுண்ணறிவு மாடல் தானாக செய்திகளைத் தேர்வு செய்து, அதற்குத் தகுந்த வார்த்தை, புகைப்படம் மற்றும் வீடியோவை தேர்ந்தெடுத்துக் கொள்ளும். சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் தனது கருத்தையும் இந்த மாடல்கள் நிகழ்ச்சியின் நடுவே பகிர்ந்து கொள்ளும். இவை அனைத்தும் இன்னும் 6 மாதங்களில் நடைமுறைக்கு வரும்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்