உலகப் புகழ்பெற்ற பத்தமடை எப்படி தயாரிக்கப்படுகிறது?

காணொளிக் குறிப்பு, பாய் என்றாலே பலருக்கும் உடனே நினைவுக்கு வருவது, பத்தமடை தான்
உலகப் புகழ்பெற்ற பத்தமடை எப்படி தயாரிக்கப்படுகிறது?
பிரசுரிக்கப்பட்டது

பாய் என்றாலே பலருக்கும் உடனே நினைவுக்கு வருவது, பத்தமடை தான். திருநெல்வேலி மாவட்டத்தில், தாமிரபரணி நதிக் கரையில் அமைந்துள்ள கிராமமான பத்தமடையில் செய்யப்படும் பாய், உலகப் புகழ்பெற்றது. இந்த பாய்க்கு புவிசார் குறியீடு அங்கீகாரமும் வழங்கப்பட்டுள்ளது.

பத்தமடை கிராமத்தில் பல ஆண்டுகளாக பாய்களை நெய்து வரும் அவ்வா மேவி, பத்தமடை பாய்கள் எவ்வாறு தயாரிக்கப்படுகின்றன என்பது குறித்தும் அதன் சிறப்புகள் குறித்தும் பிபிசி தமிழிடம் விவரித்தார்.

“தாத்தா- பாட்டி காலத்திலிருந்தே இதைச் செய்து வருகிறோம். கோரைப் புல்லை தாமிரபரணி நீரில் ஊற வைத்து, கழிவைப் பிரித்தெடுப்போம். பின்னர் எந்த வண்ணம் வேண்டுமென வாடிக்கையாளர்கள் கேட்கிறார்களோ அதைக் கோரையுடன் கலந்து, மீண்டும் ஊற வைப்போம். பின்னர் அதை மீண்டும் உலர்த்தி, நீர் சேர்த்து பாய் நெய்கிறோம்,” என்கிறார் அவ்வா மேவி.

தொடர்ந்து பேசிய அவர், “இது மிகவும் தனித்துவமான ஒரு செயல்முறை, அதிக நேரம் தேவைப்படும். நாணலானது தண்ணீர் அதிகம் இருக்கும் இடங்களில்தான் அதிகமாக வளரும். இதனால் இயற்கையாகவே நாணலுக்கு குளிர்ச்சித் தன்மை உண்டு.

அந்த நாணலின் ஒருபகுதிதான் கோரைப்புல். இதிலிருந்துதான் பாய் தயாரிக்கப்படுகிறது. எனவே இந்தப் பாய்க்கும் அந்த குளிர்ச்சித் தன்மை உண்டு. இத்தகைய சிறப்பு வாய்ந்த பாய் பத்தமடையில் மட்டும்தான் தயாரிக்கப்படுகிறது. இதை உலகளவில் ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகளை அரசு ஏற்படுத்தித் தர வேண்டும்,” என்று கூறினார்.

தயாரிப்பு: சுப கோமதி, பிபிசி தமிழுக்காக

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

உலகப் புகழ் பெற்ற பத்தமடைப் பாய்

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)