''என் நாடு பெண்களுக்கு சுதந்திரம் அளித்தால் மீண்டும் செல்வேன்'' - முதல் ஆப்கன் பெண் விமானி
''என் நாடு பெண்களுக்கு சுதந்திரம் அளித்தால் மீண்டும் செல்வேன்'' - முதல் ஆப்கன் பெண் விமானி
பிரசுரிக்கப்பட்டது
ஆப்கானிஸ்தானின் முதல் தொழிற்முறை பெண் விமான ஓட்டுநரான மொஹதீஸ் மிர்சாயி, தாலிபன்கள் காபூல் நகரத்தை தாக்கிய போது அந்த நாட்டிலிருந்து வெளியேறினார். பல்கேரியாவில் தஞ்சம் அடைந்த அவர், தற்போது ஐரோப்பாவில் பல்கேரிய ஏர்லைனில் துணை விமானியாகப் பணியாற்றிவருகிறார். ஆண்கள் ஆதிக்கம் நிறைந்த துறையில் பெண் விமானியாக தான் நுழைந்தது ஆப்கானின் பல பெண்களுக்கு வாய்ப்புக் கதவைத் திறந்ததாகவும், ஆனால், தாலிபன்கள் காபூலைக் கைப்பற்றிய பிறகு அவை அனைத்தும் ஒரு நொடியில் முடிந்துவிட்டதாக அவர் கூறுகிறார்.
பெண்களை கல்வி மற்றும் வேலைக்குச் செல்வதை தாலிபன்கள் அனுமதித்தால் மீண்டும் தன்னுடைய நாட்டிற்குச் சென்று விமானம் ஓட்ட தயாராக இருப்பதாகக் கூறுகிறார் மொஹதீஸ் மிர்சாயி.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



