You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இஸ்ரேல் தாக்குதலில் ஐ.நா. அமைதிப்படையைச் சேர்ந்த இலங்கை, இந்தோனேஷிய வீரர்கள் காயம்
ஐ.நா., அமைதிப்படையினர் மீதான தாக்குதலை இஸ்ரேல் உடனடியாக நிறுத்த வேண்டும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வலியுறுத்தியுள்ளார்.
அடுத்தடுத்து ஐ.நா., அமைதிப்படையை சேர்ந்தவர்கள் தாக்குதலுக்கு உள்ளாகும் நிலையில் ஜோ பைடன் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
மறுபுறம் ஐ.நா., அமைதிப் படையினர் வெளியேற வேண்டும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்துள்ளார்.
என்ன நடக்கிறது?
வெள்ளியன்று லெபனானில் உள்ள ஐநாவின் இடைக்கால படையை சேர்ந்த இருவர் காயமடைந்த சம்பவத்திற்கு இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் பொறுப்பேற்றுள்ளது.
காயமடைந்தவர்கள் இலங்கையை சேர்ந்தவர்கள்.
நகோராவில் ஐநா இடைக்கால படையின் இயங்கும் தளத்தை சுற்றி இஸ்ரேல் ராணுவம் நடவடிக்கைகளை மேற்கொண்டபோது அச்சுறுத்துல்களை அடையாளம் கொண்டு தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் தெரிவித்தது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக உயர்மட்ட விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக வியாழனன்று ஐநா அமைதிப் படையை சேந்தவர் இந்தோனீசிய நாட்டினர் இருவர் இஸ்ரேல் ராணுவம் தாக்கியதில் கண்காணிப்பு கோபுரத்தில் இருந்து கீழே விழுந்து காயமடைந்தனர்.
இதற்கிடையில் சனிக்கிழமையன்று அமைதிப்படையை சேர்ந்த மேலும் ஒருவர் காயமடைந்திருப்பதாக ஐநா தெரிவித்தது.
ஃபிரான்ஸ், இத்தாலி மற்றும் ஸ்பெயின் நாட்டின் தலைவர்கள் இஸ்ரேலின் நடவடிக்கையை கண்டித்து கூட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். இந்த தாக்குதல்கள் எந்த வகையிலும் ஏற்று கொள்ள முடியாதவை என்றும் உடனடியாக இதை நிறுத்த வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்
தங்கள் நாட்டை சேர்ந்த இருவர் காயம்டைந்ததை வன்மையாக கண்டிப்பதாக இலங்கை வெளியிறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தெற்கு லெபனானில் உள்ள அமைதிப்படையினரை உடனடியாக திரும்ப அழைக்குமாறு ஐநா பொதுச் செயலரை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வலியுறுத்தியுள்ளார்.
ஐநாவின் பொதுச் செயலரே ஐநா அமைதிப் படையினரை ஆபத்தின் பாதையிலிருந்து நீக்குங்கள் இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள வீடியோவில் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த மாதத்தின் தொடக்கத்தில் இஸ்ரேலின் வெளியுறவுத் துறை அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் ஐநா பொதுச் செயலர் ஆண்டானியோ குட்டேரேஸ் இஸ்ரேலுக்கு நுழைய தடை விதிப்பதாக தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்நிலையில் லெபனானின் தெற்கு பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் ராணுவம் மற்றும் ஹெஸ்பொலா இருதரப்பும் ஏவுகணைகள் மற்றும் ராக்கெட்டுகளை கொண்டு இஸ்ரேல் – லெபனான் எல்லையில் தாக்குதல் நடத்தி வருகின்றன
அந்த பகுதியில் அமைதியை நிலைநாட்ட ஐநா தவறிவிட்டதாகவும் ஹெஸ்பொலா மீது தாக்குதல் நடத்தவிருப்பதால் ஐநா அமைதி ப்படையினர் வடக்கிலிருந்து வெளியேற வேண்டும் என்றும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
ஐநாவிற்கான இஸ்ரேலின் தூதர் டேனி டனான், ஐநா அமைதிப்படையினர் வெளியேற வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். ஆபத்தை தவிர்க்க அவர்கள் வெளியேற வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். ஐநாவின் ஷான் பியர் லாக்குவா ஐநா அமைதிப் படையினர் அவர்களின் நிலைகளில் இருந்து வெளியேற மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் தகவல்கள் காணொளியில்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)