8 ஆண்டுகள் கோமாவில் இருந்து உயிரிழந்த ராணுவ தளபதி: நினைவுகளைப் பகிரும் குடும்பம்

காணொளிக் குறிப்பு, எட்டு ஆண்டுகள் கோமா; உயிரிழந்த ராணுவ தளபதியின் வலியான நினைவுகளை பகிரும் குடும்பம்
8 ஆண்டுகள் கோமாவில் இருந்து உயிரிழந்த ராணுவ தளபதி: நினைவுகளைப் பகிரும் குடும்பம்
பிரசுரிக்கப்பட்டது

இந்திய ராணுவத்தின் முன்னாள் தளபதி கரன்பீர் சிங் நாட் 2015ஆம் ஆண்டு ராணுவ நடவடிக்கையின்போது காயமடைந்தார். சுமார் எட்டு ஆண்டுகளாக கோமாவில் இருந்த அவர் சமீபத்தில் உயிரிழந்தார்.

பஞ்சாப் மாநிலத்தின் படாலாவை சேர்ந்த கரன்பீர் சிங் நாட், இரண்டு மகள்களின் தந்தை ஆவார். 2015ஆம் ஆண்டில் அவருடைய இளைய மகளுக்கு ஒன்றரை வயது மட்டுமே ஆகியிருந்தது. அக்குழந்தைக்கு தந்தை குறித்த எந்த நினைவுகளும் இல்லை. பள்ளியிலிருந்து திரும்பியதும் மருத்துவமனையில் தன் தந்தைக்கு அருகே அக்குழந்தை மீதி நேரத்தைக் கழிக்கும்.

தன் குடும்ப உறுப்பினர்களின் வழியிலேயே கரன்பீர் சிங் நாட் ராணுவத்திற்குள் சேர்ந்தார். அவருடைய தந்தையும் ஓய்வு பெற்ற ராணுவ தளபதி ஆவார்.

சேனா பதக்கம் வென்ற கரன்பீர் சிங்கின் சகோதரி ருபீந்தர் கௌர் செகான் தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார். தன் சகோதரனுடைய நினைவுகளை அவர் பகிர்ந்து கொண்டார்.

செய்தியாளர்: சர்ப்ஜித்சிங் தலிவால்

ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு: குல்ஷன் குமார்

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)