You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பாகிஸ்தான் தேர்தலில் வரலாறு படைக்கவிருக்கும் பெண் – காணொளி
பாகிஸ்தான் பொதுத் தேர்தலுக்குத் தயாராகி வரும் நிலையில், பல்லாயிரக்கணக்கான பெண்கள் வாக்களிப்பதை அவர்களது ஆண் குடும்ப உறுப்பினர்கள் தடுக்கும் அபாயத்தை எதிர்கொள்கின்றனர்.
கடுமையான சமூக நெறிமுறைகள் இந்த பெண்களை அவர்களின் வீடுகளுக்குள் அடைத்து வைக்கின்றன. அங்கு அவர்கள் பெரும்பாலும் ஆணவக் கொலைகள் மற்றும் குடும்ப வன்முறைகளால் பாதிக்கப்படுகின்றனர்.
பாகிஸ்தானில் வசிக்கும் பெண்ணான சாஜ்தா பீபி, அவர் வசிக்கும் பகுதியில் பெண்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியே செல்வது ‘அவமானம்’ என்று கருதப்படுகிறது என்று கூறுகிறார்.
வரவிருக்கும் தேர்தலில் நில உரிமையாளர்களுக்கு எதிராகத் தனது ஊரில் போட்டியிடும் முதல் பெண்மணி ரெஹானா மாக்சி ஆவார்.
அவர்களது அடையாளத்தைப் பாதுகாக்க அவர்களது பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.
அவர்களது கதையை அவர்களே சொல்கின்றனர்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)