கைலாசம் - சுதந்திர போராட்ட தியாகி: "கோழைகூட நேதாஜியின் பேச்சைக் கேட்டால் வீரனாகி விடுவார்"

கைலாசம் - சுதந்திர போராட்ட தியாகி: "கோழைகூட நேதாஜியின் பேச்சைக் கேட்டால் வீரனாகி விடுவார்"
பிரசுரிக்கப்பட்டது

“நேதாஜியின் எடைக்கு எடை தங்கம் சேர்த்த நிகழ்வில் அவருடைய பேச்சு எங்களுக்குள் புது ரத்தத்தைப் பாய்ச்சியது. ஒரு கோழைகூட அவரின் பேச்சைக் கேட்டால் வீரனாகி விடுவார்.

நேதாஜியின் ஒவ்வொரு வார்த்தையும், இடிபோல் முழங்கும். அதைக் கேட்கும் எங்களுக்கு ஊண், உறக்கம்கூட மறந்து போகும். இப்போதுகூட நேதாஜி சொன்ன வார்த்தைகளின் வீச்சை என்னால் உணர முடிகிறது,” என்று சிலிர்க்கிறார் 89 வயதை கடந்த சுதந்திர போராட்ட தியாகி கைலாசம்.

சென்னை எண்ணூர் பர்மா நகரைச் சேர்ந்தவர் சுதந்திர போராட்ட தியாகியான கைலாசம். இப்போது எண்ணூர் இந்திய தேசிய ராணுவ (சுதந்திர போராட்ட) வீரர்கள் மற்றும் தியாகிகள் சங்கத்தின் தலைவராக உள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: