பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தண்ணீரை ஆயுதமாக பயன்படுத்தினால் என்ன ஆகும்?

காணொளிக் குறிப்பு,
பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தண்ணீரை ஆயுதமாக பயன்படுத்தினால் என்ன ஆகும்?
பிரசுரிக்கப்பட்டது

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராகப் பல நடவடிக்கைகளை எடுத்தது. அதில் சிந்து நதி உட்பட ஆறு நதிகளின் நீர்ப் பங்கீடு தொடர்பான ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாகவும் இந்தியா தெரிவித்தது.

இருப்பினும், சிந்து நதி மற்றும் அதன் இரு கிளை நதிகளும் பாகிஸ்தானுக்குள் நுழைவதை இந்தியாவால் தடுக்க முடியுமா என்ற கேள்வி பலராலும் கேட்கப்படுகிறது.

கடந்த 1960ஆம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் இடையே சிந்து நதிநீர் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

அணு ஆயுதத்தை வைத்திருக்கும் இந்த இரு அண்டை நாடுகளுக்கு இடையில் அதன்பிறகு இரண்டு போர்கள் நடந்தநிலையிலும் இந்த ஒப்பந்தம் தொடர்ந்து வந்தது.

எல்லை தாண்டிய நீர் மேலாண்மைக்குச் சர்வதேச அளவில் ஓர் எடுத்துக்காட்டாக இந்த ஒப்பந்தம் பார்க்கப்பட்டது.

பாகிஸ்தான் எல்லை தாண்டிய தீவிரவாதத்தை ஆதரிப்பதாகக் குற்றம் சாட்டும் இந்தியா, அதற்கு எதிராக எடுத்துள்ள பல நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று.

ஆனால், இந்தியாவின் குற்றச்சாட்டைத் திட்டவட்டமாக மறுக்கும் பாகிஸ்தான், இந்தியாவின் நடவடிக்கைகளுக்குப் பதிலளிக்கும் விதமாக எதிர் நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது.

அதோடு, நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்துவது "ஒரு போர்ச் செயலாகக் கருதப்படும்" என்றும் கூறியுள்ளது.

விரிவாக காணொளியில்...

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு