You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
குஜராத்தில் இடிந்த பாலத்தில் தொங்கியபடி இருந்த லாரி மீட்கப்பட்டது எப்படி?
குஜராத்தின் வதோதராவில் கடந்த ஜூலை 9-ம் தேதி பாலம் இடிந்து 22 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் ஐந்துக்கும் அதிகமான வாகனங்கள் ஆற்றில் விழுந்த நிலையில் ஒரு டேங்கர் லாரி மட்டும் சுமார் ஒரு மாதமாக உடைந்த பாலத்தின் முனையில் தொங்கிக்கொண்டிருந்தது.
இந்த லாரி அங்கிருந்து அகற்றப்படாமல் இருந்தது மாநில அளவில் விவாவதத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஆகஸ்ட் 5-ம் தேதி கிட்டத்தட்ட 26 நாட்கள் கழித்து இந்த டேங்கர் லாரி வெற்றிகரமாக அங்கிருந்து அகற்றப்பட்டது.
இந்த பணியை போர்பந்தரை சேர்ந்த ஒரு பொறியியல் நிறுவனத்திடம் அரசு வழங்கியது. 5 - 6 நாட்கள் இந்நிறுவனத்தை சேர்ந்த 60 - 70 ஊழியர்கள் இந்த லாரியை அகற்ற திட்டமிட்டனர்.
பலூன் வடிவ கேப்ஸுல்களில் காற்று நிரப்பப்பட்டு லாரியின் முன் பகுதி தூக்கப்பட்டு பின்னர் பின்பகுதியில் இருந்து கிரேன் மூலம் லாரி இழுக்கப்பட்டது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு