You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
யுக்ரேனின் டிரோன் தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்திய ரஷ்யா - என்ன நடக்கிறது?
ஜூன் 6-ம் தேதி அதிகாலை யுக்ரேன் தலைநகர் கியவ் ரஷ்யாவில் இருந்து தீவிரமான ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளதாக யுக்ரேன் நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதல் ஏற்படுத்திய சக்திவாய்ந்த வெடிப்புகளின் காட்சிகள் இவை.
ரஷ்யாவிற்குள் Bomber Aircraft வகை விமானங்கள் மீது யுக்ரேன் நடத்திய ட்ரான் தாக்குதல்களுக்கு ரஷ்யா பழிவாங்கும் என அதிபர் புதின் எச்சரித்திருந்தார்.
கியவ் மட்டுமின்றி யுக்ரேனின் மற்ற பகுதிகளில் ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளதுஇந்த தாக்குதலில் குறைந்தது 3 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் 49 பேர் காயமடைந்துள்ளதாக யுக்ரேன் அதிபர் தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதல்கள் யுக்ரேன் அரசின் பயங்கரவாத செயலுக்கு பதிலடி என ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு