You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
துன்புறுத்தலில் இருந்து மீட்கப்பட்ட குரங்கு காட்டுக்குள் விடப்பட்ட காட்சி
மினி எனும் இந்த குரங்கு துன்புறுத்தப்பட்டு வந்த நிலையில், அது மீட்கப்பட்டு வனப்பகுதிக்குள் விடப்பட்ட காட்சி இது. அதனை தத்தெடுத்துள்ள குடும்பத்திடம் அக்குரங்கு உள்ளது. இதனால் வனத்திற்குள் அது பாதுகாப்பாக இருக்கும்.
வனத்திலிருந்து குட்டியாக அக்குரங்கை எடுத்து வந்த உரிமையாளர், அதை துன்புறுத்தி வீடியோவாக எடுத்து, விலங்குகளை கொடுமைப்படுத்தி இன்பம் காணும் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பினார்.
இதை ‘பிபிசி ஐ இன்வெஸ்டிகேஷன் வெளிக்கொண்டு வந்த நிலையில், அக்குரங்கு மீட்கப்பட்டு சரணாலயம் கொண்டு செல்லப்பட்டது. இரண்டு ஆண்டுகள் கழித்து அக்குரங்கும் அதன் குடும்பமும் வனத்திற்குள் விடப்படுவதற்கு தயாரானது.
- இது, பிபிசி-க்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)