நேபாள ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளான இந்தியப் பேருந்து - என்ன நடந்தது? - காணொளி

நேபாள ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளான இந்தியப் பேருந்து - என்ன நடந்தது? - காணொளி
பிரசுரிக்கப்பட்டது

இந்தியப் பதிவெண் கொண்ட பேருந்து ஒன்று நேபாளத்தில் உள்ள மார்சியாங்கடி ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது.

நேபாளத்தின் பொக்ரா நகரில் இருந்து காத்மாண்டு நோக்கிச் சென்று கொண்டிருந்த அந்தப் பேருந்தில் 40 பேர் பயணித்ததாகப் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்தப் பேருந்து உத்தரபிரதேச மாநிலத்தின் பதிவெண்ணைக் கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். நிவாரணம் மற்றும் மீட்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. பலர் காயமடைந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

இந்த விபத்துக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்  (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)