You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சௌதியை பாராட்டியது குறித்து ரொனால்டோவுக்கு ஆம்னெஸ்டி அறிவுரை கூறியது ஏன்?
கிறிஸ்டியானோ ரொனால்டோ தனக்குக் கிடைத்திருக்கும் புதிய தளத்தைப் பயன்படுத்தி சௌதி அரேபியாவில் மனித உரிமைகள் பிரச்சனைகள் குறித்து பேச வேண்டும் என அம்னெஸ்டி இன்டர்நேஷனல் எனப்படும் சர்வதேச மன்னிப்பு சபை கேட்டுக் கொண்டிருக்கிறது.
37 வயதான ரொனால்டோ, 2025 ஆம் ஆண்டு வரை சௌதி அரேபியாவின் அல் நாசர் கிளப்பில் ஆடுவதற்கு ஆண்டுக்கு 177 மில்லியன் பவுண்டுகளுக்கு மேல் மதிப்புள்ள உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளார்.
இந்திய மதிப்பின்படி அவருக்கு ஆண்டுக்கு ரூ.1770 கோடிக்கும் அதிகமான பணம் கிடைக்கும். ரொனால்டோவின் ஒப்பந்தம் "அரசியலுக்காக விளையாட்டைப் பயன்படுத்தும் உத்தியின் (ஸ்போர்ட்ஸ் வாஷிங்)" ஒரு பகுதியாகும் என்று அம்னெஸ்டி கூறுகிறது. செவ்வாயன்று அல் நாசரால் அறிமுகப்படுத்தப்பட்ட ரொனால்டோ சௌதி அரேபியாவை "அற்புதமான நாடு" என்று அழைத்தார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்