செர்பிய தீவில் கடும் குளிரில் சிக்கித் தவித்த 200 கால்நடைகள் உயிர் பிழைத்தது எப்படி?
செர்பிய தீவில் பல நாட்களாக கடும் குளிரில் சிக்கித் தவித்த சுமார் 200 கால்நடைகள் மற்றும் குதிரைகள் மீட்கப்பட்டுள்ளன. டான்யூப் நதியில் உள்ள செர்பிய தீவில் இந்த கால்நடைகள் பல நாட்களாக சிக்கித் தவித்தன.
இவை கரைக்குத் திரும்பும்போது ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்ததால், அதன் வழி பாதியில் தடைபட்டது. ஜனவரி 9-ம் தேதி கால்நடைகளை மீட்கும் முயற்சிகள் தொடங்கின.
வழக்கமாக, இந்த கால்நடைகள் குறைவான ஆழம் கொண்ட ஆற்றுநீரில் அலைந்துவிட்டுப் பிறகு தமது இருப்பிடத்திற்குத் திரும்பும். ஆனால், இங்கு லேசான குளிர் காரணமாக, பனி உறைந்து நீர்மட்டம் உயர்ந்திருக்கிறது.
இந்த வாரம் உறைய வைக்கும் அளவுக்கு வெப்பநிலை சென்றது. பசியிலும் குளிரிலும் தவித்த இந்த கால்நடைகளைக் காப்பாற்ற மீட்புக்குழுவினர் துரிதமாகச் செயல்பட வேண்டியிருந்தது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



