ஜிம்னாஸ்டிக்கில் சாதனை படைக்கும் மாற்றுத் திறனாளிகள்! இத்தாலியின் குதிரை ஜிம்னாஸ்டிக் குழு
ஜிம்னாஸ்டிக்கில் சாதனை படைக்கும் மாற்றுத் திறனாளிகள்! இத்தாலியின் குதிரை ஜிம்னாஸ்டிக் குழு
பிரசுரிக்கப்பட்டது
இத்தாலியை சேர்ந்த குதிரையில் ஜிம்னாஸ்டிக் செய்யும் மாற்றுத் திறனாளிகள் குழு சமூக வலைத்தளங்களில் பரவலாக அறியப்பட்டு வருகிறது.
இந்த குழுவின் ஆசிரியர் நெல்சன் விடோனி இவர்களுக்கும் குதிரைகளுக்குமான உறவை மனோவியல் மூலமாக ஏற்படுத்தி அவர்களை போட்டிகளுக்கு தயார் படுத்துகிறார்.
சுய மதிப்பு, சமநிலை மற்றும் பிறருடன் ஒருங்கிணைதல் உள்ளிட்ட அடிப்படை விஷயங்களை கொண்டு இந்த அணிக்கு பயிற்சி அளித்து வருகிறார். இந்த அணி பல போட்டிகளிலும் பங்கேற்று விருதுகளை பெற்று வருகிறது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



