10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை அரசு ஊழியர்களாக மாற்றிய தாசில்தார்

காணொளிக் குறிப்பு, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை அரசு ஊழியர்களாக மாற்றிய தாசில்தார்
10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை அரசு ஊழியர்களாக மாற்றிய தாசில்தார்
பிரசுரிக்கப்பட்டது

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் தாசில்தாராக இருப்பவர் மாரிமுத்து. இவர் கடந்த 15 ஆண்டுகாலமாக அரசு போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் மாணவ மாணவிகளுக்கு இலவசமாக பயற்சி வகுப்பு நடத்தி வருகிறார். இவரிடம் படித்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு அலுவலங்களில் அரசு பணிகளில் வேலை பார்த்து வருகிறார்கள்.

இந்த பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்பவர்கள் பெரும்பாலும் பின்தங்கிய பகுதிகளில் இருந்து வருகிறார்கள். சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் முன்பதிவு செய்யப்படாத ரயில்களில் ஏறியும், பேருந்துகளிலும் நூறு கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து இங்கே படிக்க வருகிறார்கள்.

காணொளி தயாரிப்பு: ஹேமா ராகேஷ்

ஒளிப்பதிவு: நடராஜன் சுந்தர்

தாசில்தார்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: