You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பாரத் ஜோடோ யாத்திரையில் பேசிய பேச்சுக்கு ராகுல் வீட்டுக்கு வந்த போலீஸ் - காங்கிரஸ் கண்டனம்
பாரத் ஜோடோ யாத்திரையின்போது பெண்களின் மீது பாலியல் தாக்குதல் நடப்பதாக ராகுல் காந்தி பேசிய பேச்சு தொடர்பாக விசாரிப்பதற்காக, டெல்லியில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வீட்டுக்கு போலீஸ் வந்தது.
பிரதமர் நரேந்திர மோதியின் உற்ற நண்பரை பாதுகாக்கும் முயற்சி இது என்றும், இது கோழைத்தனமான செயல் என்றும் கூறி காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது. இந்திய அரசியலிலும் இது பரபரப்பை கிளப்பியுள்ளது.
இந்த நடவடிக்கையை எதிர்த்து காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர்.
"டெல்லி போலீஸ் ராகுல் காந்தியை சந்திக்க இருக்கிறது. அவரிடம் இருந்து நாங்கள் கேட்டுள்ள தகவல்களை அவர் அளிப்பார். அவருக்கு இது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவரது அலுவலகம் அந்த நோட்டீசை பெற்றுக்கொண்டுள்ளது" என்று டெல்லி போலீஸ் சிறப்பு ஆணையர் (சட்டம் ஒழுங்கு) சாகர் பிரீத் ஹூடா தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்