ரஷ்யா: விமான நிலையத்திற்குள் புகுந்து இஸ்ரேல் விமானம் சுற்றி வளைப்பு - என்ன நடந்தது?
ரஷ்யாவின் மகாச்காலா (Makhachkala ) விமானநிலையத்தை ஞாயிற்றுக்கிழமை இரவு நூற்றுக்கணக்கான நபர்கள் முற்றுகையிட்ட வீடியோ ஒன்று , சமூக ஊடகங்களில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவில் இருந்து ரஷ்யாவுக்கு ஒரு விமானம் வந்தபோது கோபமடைந்த ஒரு கூட்டம் விமான ஓடுதளத்துக்கே சென்றது. அங்கே இஸ்ரேலில் இருந்து வந்த விமானத்தை சுற்றி வளைத்தது.
சமூக ஊடகங்களில் வெளியான வீடியோக்களை பார்க்கும்போது நூற்றுக்கணக்கான நபர்கள் கையில் பாலத்தீன கொடியுடன் கதவுகள் மற்றும் ஜன்னல்களை அது நொறுக்கினர். அப்போது கூட்டத்தில் பலர் யூத இன வெறுப்பு கோஷங்களை எழுப்பினர், வேறு சிலர் அல்லாஹு அக்பர் என கோஷங்களை எழுப்பினர்.

பட மூலாதாரம், RAMAZAN RASHIDOV/TASS
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



