சிங்கப்பூரைவிட பெரிய ராட்சத பனிப்பாறை திடீரென நகர்வது ஏன்? 'அழிவின் பாதை' என வர்ணிக்கும் விஞ்ஞானிகள்

காணொளிக் குறிப்பு, சிங்கப்பூரைவிட பெரிய ராட்சத பனிப்பாறை திடீரென நகர்வது ஏன்? விஞ்ஞானிகள் கூறுவது என்ன?
சிங்கப்பூரைவிட பெரிய ராட்சத பனிப்பாறை திடீரென நகர்வது ஏன்? 'அழிவின் பாதை' என வர்ணிக்கும் விஞ்ஞானிகள்
பிரசுரிக்கப்பட்டது

சிங்கப்பூர், பஹ்ரைன் போன்ற 29 நாடுகளைக் காட்டிலும் அதிக பரப்பளவு கொண்ட ராட்சத பனிப்பாறை அன்டார்டிகாவை விட்டு வெளியேறி கடலில் நகர்ந்து கொண்டிருக்கிறது. அந்த பாறை நகர்வது ஏன்? இப்போது எங்கே இருக்கிறது?

அது நகர்ந்து செல்வதன் விளைவு என்ன? A23a என அந்த பனிப்பாறை அறியப்படும் 1986இல் அண்டார்டிக்கில் இருந்து பிரிந்தது. அப்போதிருந்து மிகச் சிறிய அளவில் நகர்ந்துகொண்டிருந்த இந்தப் பனிப்பாறை, சமீபத்தில் ஒரு பெரும் இடப்பெயர்வைத் தொடங்கியுள்ளது.

முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக, நிலையான ‘பனித்தீவு’ போல வெட்டெல் கடலின் அடிமட்டத்தில் சிக்கியிருந்தது. சுமார் 350மீட்டர் ஆழமுள்ள அதன் அடிப்பாகம் அதை அந்த இடத்தில் நங்கூரமிட வைத்திருந்தது. ஆனால், அந்த அடிப்பகுதி 2020ஆம் ஆண்டு வரை சிறிது சிறிதாக உருகியதன் விளைவாக, அந்த பனிப்பாறை மீண்டும் கடல்நீரில் மெல்ல மிதக்கத் தொடங்கியது.

பின்னர் காற்றோட்டம், காற்று ஆகியவை அந்தப் பனிப்பாறையை வெப்பமான காற்று மற்றும் நீர் இருக்கும் வடக்கு நோக்கி நகர வைத்தது. இப்போது அண்டார்டிகாவின் மிதக்கும் பனியில் பெருமளவைச் சுமந்து செல்லும் A23a தற்போது அந்தப் பாதையைப் பின்பற்றிப் பயணித்து வருகிறது. இது அழிவின் பாதை. இன்னும் சில மாதங்களில் இந்தப் பெரும் பனிப்பாறை துண்டுதுண்டாக உடைந்து உருகப் போகிறது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)