அரவிந்த் கேஜ்ரிவால் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் என்னென்ன?
டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. இந்த நடவடிக்கையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை நாடப் போவதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. சிறையில் அடைக்கப்பட்டால் அங்கிருந்தே கேஜ்ரிவால் முதல்வர் பணிகளை மேற்கொள்வார் என கட்சி தெரிவித்துள்ளது.
சரி கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டது ஏன்?
டெல்லியில் ஆம் ஆத்மி அரசின், புதிய மதுபானக் கொள்கை கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் 16-ம் தேதியன்றுஅறிமுகப்படுத்தப்பட்டது. டெல்லி முழுவதும் மதுபான மண்டலங்களை உருவாக்கி, 849 விற்பனை நிலையங்களில் சில்லறை விற்பனை மேற்கொள்ள தனியாருக்கு உரிமம் வழங்கப்பட்டது. இது பரிசோதனை முறையில் அமல்படுத்தப்பட்டு பின்னர் 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் நிறைவடைந்தது.
இதற்கிடையே, புதிய மதுபானக் கொள்கையை அமல்படுத்தியதில் ஆம் ஆத்மி அரசு முறைகேட்டில் ஈடுபட்டதாக டெல்லி துணைநிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா குற்றம் சாட்டினார். அதோடு இது குறித்த சிபிஐ விசாரணைக்கும் பரிந்துரை செய்தார். இதைத் தொடர்ந்து, சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையை ஆயுதமாகப் பயன்படுத்தி ஆம் ஆத்மி அரசை மிரட்டுவதாக மத்திய அரசு மீது முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் குற்றம் சாட்டினார். இந்த வழக்கில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் என்னவென்பதை பார்ப்போம்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



