குறட்டையால் வரும் பாதிப்புகள் என்ன? குறட்டை வராமல் தடுப்பது எப்படி?
குறட்டை என்பது சாதாரணமான விஷயமாக தெரிந்தாலும், பலருக்கும் பாதிப்பை உண்டாக்குகிறது.
அப்படி குறட்டையால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது அனுபவம் குறித்து இந்த காணொளியில் பேசியுள்ளனர்.
பொதுவாக சத்தமாக குறட்டை விடுவது, தூக்கத்தில் ஏற்படும் மூச்சுத்திணறல் (OSA) எனப்படும் தூக்கக் கோளாறுடன் தொடர்புடையதாக இருக்கும், இந்த நிலையில் தூக்கத்தின் போது காற்றோட்டம் தடைப்பட்டு, சுவாசம் நின்று மீண்டும் தொடங்கும் என்று நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
இந்த கோளாறு தொண்டையின் சுவர்களை தளர்வடையச் செய்து, சுருங்கச் செய்து, சாதாரண சுவாசத்தை குறுக்கிட்டு, ஆக்ஸிஜன் குறைப்பாட்டை ஏற்படுத்துகிறது.
குறட்டை உடல்நலத்தை மட்டுமின்றி மனநலன் மற்றும் குடும்பங்களையும் கூட பாதிக்கிறது. இதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் என்ன? இதை எப்படி தடுப்பது என்பது குறித்து விரிவாக இந்த காணொளியில் காணலாம்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



