லியோ வெற்றிவிழாவில் விஜய் வைத்த முற்றுப்புள்ளி
லியோ பட வெற்றிவிழாவில் சூப்பர் ஸ்டார் பட்டம் பற்றிய சர்ச்சைக்கு விஜய் முற்றுப்புள்ளி வைத்தார். சூப்பர் ஸ்டார் என்றால் அது ஒருவர் தான் என்றார். வாரிசு பட இசை நிகழ்ச்சியில் விஜய் சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு ஆசைப்படுகிறார் என்ற சர்ச்சை தொடங்கியது. அதன் பிறகு ரஜினி, விஜய் ரசிகர்களிடையே சமூக வலைதளங்களில் கடுமையான வாக்குவாதம் நடைபெற்றது. லியோ வெற்றி விழா நிகழ்வில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் விஜய் பேசியுள்ளார்.
"என் நெஞ்சில் குடியிருக்கும் நண்பா.. நண்பிகள்.. உண்மைய சொல்லணும்னா நீங்க தான் என்னை உங்க நெஞ்சுல குடி வச்சிருக்கீங்க.. நான் குடியிருக்கும் கோயில் நீங்க எல்லாம் இது கொஞ்சம் சினிமா டயலாக் மாறி தெரியலாம் ஆனால், நீங்க எனக்கு காட்டுற அன்புக்கு, என் உடம்ப செருப்பா தச்சு உங்களுக்கு போட்டாக் கூட பத்தாது.. நீங்க எல்லாம் பிளடி ஸ்வீட்" என பேசி விஜய் அரங்கத்தை அதிர வைத்தார்.
சமூக வலைதளங்கில் சமீப காலமாக ரசிகர்கள் கோபப்படுவதை கண்டித்துள்ள அவர், "நமக்கு நிறைய பெரிய வேலைகள் இருக்கு, தேவையில்லாமல் சோஷியல் மீடியாவில் கோபப்பட்டு நேரத்தை வீணடிக்க வேண்டாம்" என்று கூறினார்.

பட மூலாதாரம், X/ @7SCREENSTUDIO
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



