ஆந்திராவில் பிடிபட்ட 13 அடி நீளமுள்ள ராஜநாகம் - காணொளி

காணொளிக் குறிப்பு, ஆந்திராவில் பிடிபட்ட 13 அடி நீளமுள்ள ராஜநாகம்
பிரசுரிக்கப்பட்டது

ஆந்திர மாநிலம் அனகாபள்ளி மாவட்டம்முகுந்தபுரம் கிராமத்தை ஒட்டியுள்ள வயல்வெளியில் ராஜ நாகம் காணப்பட்டது. அப்போதுவயலில் வேலை செய்த விவசாயிகள் இவ்வளவு நீளமுள்ள ராஜநாகத்தை கண்டு அஞ்சினர். 

அந்த இடத்தை விட்டே தப்பித்து ஓடிய விவசாயிகள் உடனடியாக  வனத்துறைஅதிகாரிகாலை தொடர்பு கொண்டனர். 

வனத்துறை அதிகாரிகள் அந்த இடத்துக்கு வந்தாலும் பாம்பை பிடிக்கும் முயற்சி தோல்வி அடைந்து கொண்டே இருந்தது. இரண்டு மணிநேரம் கடும் முயற்சிக்கு பிறகு ஒருவழியாக பாம்பை பிடித்தனர். 

அதன் பின்னர் ராஜ நாகம் வனப்பகுதியில் விடப்பட்டது. 

இது குறித்து பேசிய சோடாவரம் வனத்துறை அதிகாரி ரவி வர்மா, ராஜ நாகம் மிக மிக விஷத்தன்மை வாய்ந்தது. அதன் நீளம் 15 அடி வரை கூட இருக்கும், 13 கிலோ வரை எடை இருக்கக்கூடியது.  தற்போது இனச்சேர்க்கை காலம் என்பதால் இங்கே இந்த மிகப்பெரிய ராஜ நாகம் வந்திருக்கிறது என்றார். விவரங்களை காணொளியில் பார்க்கலாம்.

ராஜநாகம்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: