நெயில் பாலிஷ் வாங்கும் போது கவனம் தேவை - தவறாக வாங்கினால் என்ன பிரச்னை தெரியுமா?

நெயில் பாலிஷ் வாங்கும் போது கவனம் தேவை - தவறாக வாங்கினால் என்ன பிரச்னை தெரியுமா?
பிரசுரிக்கப்பட்டது

தனது விரல்களில் இருந்து நகங்கள் பிரிந்து வரத் தொடங்கியதை அடுத்து, அதை வீடியோவாக டிக்டாக்கில் வெளியிட்டார் லாரா டேவிஸ்.

லாராவின் நகத்திலும், விரலிலும் அலர்ஜியால் ஏற்பட்ட பாதிப்பை உருவாக்கியது அவர் தனது நகங்களுக்காக பயன்படுத்திய ஜெல் நெயில் பாலிஷ்.

2018ஆம் ஆண்டு பிரிட்டஷ் தோல் நோய் மருத்துவர்கள் கூட்டமைப்பு, ஜெல் நெயில் பாலிஷ் பயன்படுத்துவதால் அலர்ஜி ஏற்படுகிறது என எச்சரித்தனர்.

இது தொடர்பான ஆய்வை மேற்கொண்ட தோல் நோய் மருத்துவரான டெய்ட்ரி பக்லி , அண்மைக்காலமாக இதுபோன்ற பிரச்னைகள் அதிகமாகி வருவதாக தெரிவித்தார்.

பிளாஸ்டிக்கை உருவாக்க பயன்படுத்தும் ரசாயனங்கள் கொண்டு இந்த ஜெல் நெயில் பாலிஷ் உருவாக்கப்படுவதால் இந்த பிரச்னை ஏற்படுகிறது.

இந்த ரசாயன கலவை திடப்பொருளாக இருக்கும் வரை எந்த பிரச்னையும் ஏற்படுவதில்லை. ஆனால் திரவமாக நெயில் பாலிஷ் வடிவில் வரும் போது, உடலால் உறிஞ்சப்படுகிறது.

இது சிலருக்கு அலர்ஜியை உருவாக்கி பல பிரச்னைகள் ஏற்பட காரணமாக அமைகிறது

வழக்கமான நெயில் பாலிஷில் இருந்து ஜெல் நெயில் பாலிஷ் வேறுபட்டது. ஜெல் பாலிஷை காய வைக்க பிரத்யேக நடைமுறை உள்ளது.

ஜெல் நெயில் பாலிஷ் மூலமாக ஏற்படும் அலர்ஜி, இந்த துறையில் உள்ள நிபுணர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

சுசான் கிளேட்டன் 20 ஆண்டுகளாக நகக் கலைஞராக இருக்கிறார். சில வாடிக்கையாளர்களுக்கு ஜெல் நெயில் பாலிஷால் அலர்ஜி ஏற்பட்டதையடுத்து அது குறித்து ஆலோசிக்க தனியாக ஒரு ஃபேஸ்புக் குழுவை தனது சகாக்களுடன் இணைந்து உருவாக்கி இருக்கிறார் சுசான்.

நடைமுறையில் உள்ள ஒழுங்குமுறைகளை உறுதியாக செயல்படுத்த வேண்டும் என்றும், பொருட்களின் விவரங்களை தெளிவாக தெரியும்படி குறிப்பிடுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் இந்த துறையின் வல்லுநர்கள் விரும்புகிறார்கள்.

ஜெல் நெயில் பாலிஷை பாதுக்காப்பாக பயன்படுத்துவது தொடர்பாக நகக் கலைஞர்கள் கூட்டமைப்பின் சார்பாக ஒர் ஆலோசனை முன்வைக்கப்படுகிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: