21 வருடமாக மகனை தினமும் போட்டோ எடுக்கும் தந்தை - என்ன காரணம் தெரியுமா? (காணொளி)
தனது மகனுடைய வாழ்க்கையின் முதல் 21 ஆண்டுகளின் ஒவ்வொரு நாளும் ஒரு புகைப்படத்தை எடுத்த அர்ப்பணிப்புள்ள தந்தை, தனது குழந்தை வளர்வதை படம்பிடிப்பது "மகிழ்ச்சி" என்று தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தை சேர்ந்த இயன் மெக்லியோட், தனது மகனான கோரியின் குழந்தைப் பருவத்தின் ஒரு தருணத்தையும் மறந்துவிடக்கூடாது என்பதை உறுதிப்படுத்த விரும்பினார். எனவே அவர் கோரியின் சிறுவயது முதலே தனது கேமராவை எடுத்து புகைப்படம் எடுக்கத் தொடங்கினார்.
கடந்த 21 வருடங்களில், தனது மகன் எங்கிருந்தாலும் புகைப்படம் எடுக்கும் தனது பணியை இயன் எந்த காரணத்திற்காகவும் நிறுத்தியதில்லை.
இப்போது 30 வயதாகும் கோரி, தனது தந்தை செய்து வந்த பணியை கடந்த 9 ஆண்டுகளாக விடாமல் செய்து வருகிறார்.
"பிறப்பு முதல் இறப்பு வரை பார்ப்பது மிகவும் நன்றாக இருக்கும், எனவே நான் கடைசி வரை தொடரப் போகிறேன்" என்று கோரி கூறினார்.

பட மூலாதாரம், IAN MCLEOD/CORY MCLEOD
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



