இஸ்ரேல்: நெதன்யாகு அரசைக் கவிழ்ப்பதாக அவரது அமைச்சர்கள் மிரட்டல் விடுத்தது ஏன்?

இஸ்ரேல்: நெதன்யாகு அரசைக் கவிழ்ப்பதாக அவரது அமைச்சர்கள் மிரட்டல் விடுத்தது ஏன்?
பிரசுரிக்கப்பட்டது

அமெரிக்க அதிபர் ஜோ பைடனால் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட காஸா போர் நிறுத்தத்திற்கான முன்மொழிவை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஏற்றுக்கொண்டால் அமைச்சரவையிலிருந்து விலகி, கூட்டணி ஆட்சியை கவிழ்ப்போம் என இரு தீவிர வலதுசாரி அமைச்சர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நிதியமைச்சர் பெஸோலெல் ஸ்மாட்ரிக் மற்றும் தேசிய பாதுகாப்பு அமைச்சர் ஈடமார் பென்-கவிர் இருவரும், ஹமாஸை அழிப்பதற்கு முன்பாக எந்தவொரு போர் நிறுத்த ஒப்பந்தமும் கூடாது என்று தெரிவித்துள்ளனர்.

ஆனால், போர் நிறுத்தத்தை நெதன்யாகு ஆதரித்தால், தான் அரசாங்கத்திற்கு ஆதரவாக இருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் யாயிர் லாபிட் தெரிவித்துள்ளார். ஹமாஸ் ஆயுதக்குழு அழித்து, அனைத்து பணயக்கைதிகளையும் விடுவிக்கும் வரை நிரந்தர போர் நிறுத்தம் கிடையாது என, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

நீங்கள் மொபைல் போன் அல்லது கணிணி/ மடிக்கணிணியில் வாட்ஸ் ஆப்பை பயன்படுத்துபவராக இருந்தால் பிபிசி தமிழின் வாட்ஸ்ஆப் சேனலைப் பின்தொடர இந்த லிங்கை க்ளிக் செய்யவும். பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)