You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மங்களூரு குண்டுவெடிப்பு: ‘பயங்கரவாதச் செயல்’ என கர்நாடக காவல்துறை அறிவிப்பு - என்ஐஏ விசாரணை
- எழுதியவர், இம்ரான் குரேஷி
- பதவி, பிபிசி இந்திக்காக
- பிரசுரிக்கப்பட்டது
கர்நாடக மாநிலம் மங்களூருவில் நேற்று மாலை ஆட்டோ ரிக்ஷாவில் நிகழ்ந்த குறைந்த தீவிரம் கொண்ட குண்டுவெடிப்பை, பெரும் சேதத்தை ஏற்படுத்தும் நோக்கில் நடந்த பயங்கரவாதச் செயல் என கர்நாடக காவல்துறை தெரிவித்துள்ளது.
நேற்று மாலை மங்களூரு வந்த நபர், ஆட்டோ ரிக்ஷாவில் ஏறி நகரின் மற்றொரு பகுதிக்கு பயணித்துக் கொண்டிருந்த போது குறைந்த தீவிரம் கோண்ட குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.
குண்டு வெடிப்பு நிகழ்ந்த இடத்தில் தேசிய புலனாய்வு குழு ஆய்வு செய்ததை மாநில உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா உறுதிப்படுத்தினார்.
“குறைந்த தீவிரம் கொண்ட வெடிபொருளை வெடிக்கச் செய்து பீதியை ஏற்படுத்துவது அவரது நோக்கமாக இருந்தது தெளிவாகிறது. ஒருவேளை, தற்செயலாக அல்லது வேண்டுமென்றே நகரத்திற்கு செல்லும் வழியில் அதை வெடிக்கச் செய்திருக்கலாம். அந்த நபரும் காயமடைந்துள்ளார்'' என கர்நாடக காவல்துறை தலைமை இயக்குநர் பிரவீன் சூட் பிபிசி இந்தி சேவையிடம் தெரிவித்தார்.
“அந்த நபர் தன்னுடைய அடையாளங்களை மாற்றிக்கொண்டு சென்றுள்ளார். எங்களிடம் போதுமான தகவல் உள்ளது. இருந்தாலும், அவர் குணமடைந்ததும் பேசுவதற்காக காத்திருக்கிறோம்” என்றும் பிரவீன் சூட் தெரிவித்தார்.
கர்நாடகாவின் கடலோரப் பகுதியான மங்களூரு, நீண்ட காலமாக சில பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடைய வகுப்புவாத பதற்றம் நிறைந்த பகுதியாக உள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்