அடுத்தடுத்து மரணிக்கும் சிவிங்கிப்புலிகள்: சிக்கலில் பிரதமர் தொடங்கி வைத்த திட்டம்

பிரதமர்  தொடங்கிய திட்டம் வெற்றிபெறுவதில் சிக்கலா?

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், ஷூரையா நியாஸி
    • பதவி, போபாலில் இருந்து BBC இந்திக்காக.
  • பிரசுரிக்கப்பட்டது

70 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் இருந்து அழிந்துபோன சிவிங்கிப் புலிகளை இங்கு மீண்டும் குடியமர்த்தும் திட்டம் சிக்கலில் இருப்பதாக தெரிகிறது.

மத்திய பிரதேசத்தின் குனோ தேசிய பூங்காவில் பெண் சிவிங்கிப்புலி ஜ்வாலாவின் மேலும் இரண்டு குட்டிகள் மே 25ஆம் தேதி இறந்துபோயின.

இந்த ஆண்டு மார்ச் முதல் குனோ பூங்காவில் 6 சிவிங்கிப்புலிகள் இறந்துள்ளன. தற்போது அங்கு சிவிங்கிப் புலிகளின் எண்ணிக்கை 17 ஆகக் குறைந்துள்ளது. புதிதாகப் பிறந்த குட்டிகளில் ஒன்று மட்டுமே எஞ்சியுள்ளது. அதன் நிலையும் கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

மே 25ஆம் தேதி இரண்டு குட்டிகள் இறந்தது மத்திய, மாநில அரசின் திட்டங்களுக்குப் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டம் மிகவும் ஆரவாரத்துடன் தொடங்கப்பட்டது, சிவிங்கிப்புலிகளை இங்கே கொண்டு வர நீண்ட செயல்முறை பின்பற்றப்பட்டது.

மாநில முதல்வர் சிவராஜ் சிங் செளஹான், மூத்த அதிகாரிகள் மற்றும் வனத்துறை உயர் அதிகாரிகளுடன் வெள்ளிக்கிழமையன்று ஆலோசனை நடத்தினார்.

எந்தவிதமான அலட்சியமும் பொறுத்துக் கொள்ளப்பட மாட்டாது என்று அதிகாரிகளிடம் முதல்வர் கூறினார். குனோவில் கண்காணிப்பை அதிகரிக்கவும் அவர் உத்தரவிட்டார்.

அந்தப் பகுதியில் வெயிலின் தாக்கத்தால் இரண்டு குட்டிகள் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக மே 23ஆம் தேதி ஒரு குட்டி இறந்தது. முதல் குட்டி இறந்த நாளன்று வெப்பநிலை 47 டிகிரி செல்ஷியஸாக இருந்தது என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

குனோவில் எப்போது, என்ன நடந்தது?

• செப்டம்பர் 17ஆம் தேதி நமீபியாவில் இருந்து குனோ தேசிய பூங்காவிற்கு எட்டு சிவிங்கிப்புலிகள் கொண்டு வரப்பட்டன.

• இரண்டாவது தொகுதியில் 12 சிவிங்கிப்புலிகள் பிப்ரவரி 18ஆம் தேதி தென்னாப்பிரிக்காவில் இருந்து கொண்டுவரப்பட்டன.

• நமீபிய பெண் சிவிங்கிப்புலி 'ஜ்வாலா' மார்ச் 24ஆம் தேதி குனோ பூங்காவில் நான்கு குட்டிகளை ஈன்றது.

• நமீபியாவை சேர்ந்த சிவிங்கிப்புலி 'சாஷா' சிறுநீரக செயலிழப்பு காரணமாக மார்ச் 27ஆம் தேதி உயிரிழந்தது.

• சீட்டா 'உதய்' ஏப்ரல் 23ஆம் தேதி இறந்தது. அது தென்னாப்பிரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட்டது.

• மே 9ஆம் தேதி சிவிங்கிப்புலி 'தக்‌ஷா' காலமானது.

• ஒரு சிவிங்கிப்புலிக்குட்டி மே 23 ஆம் தேதியும், மேலும் இரண்டு குட்டிகள் மே 25ஆம் தேதியும் இறந்தன

பிரதமர்  தொடங்கிய திட்டம் வெற்றிபெறுவதில் சிக்கலா?

பட மூலாதாரம், CHEETAH CONSERVATION FUND

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

குட்டிகள் இறந்ததையடுத்து, குனோவில் தங்கள் தரப்பிலிருந்து கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டு வருகிறது என்று மத்திய பிரதேசத்தின் தலைமை வனப் பாதுகாவலர் ஜே.எஸ்.சௌஹான் பிபிசியிடம் கூறினார்.

"இதுவரையிலான செயல் அட்டவணை மிகவும் நன்றாகவே உள்ளது. அதில் எந்தக் குறையும் இல்லை. ஆனால் சில விஷயங்கள் கட்டுப்பாட்டை மீறி நடக்கின்றன. இதில் அதிகம் ஒன்றும் செய்ய முடியாது. தாய் மற்றும் குட்டிகளைப் பிரிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது,” என்று அவர் குறிப்பிட்டார்.

"நீங்கள் பார்த்தால், எங்கள் கண்காணிப்பு நெறிமுறை மிகவும் நன்றாகவே உள்ளது. அதிகாரிகள், ஆராய்ச்சியாளர்கள், வெளிநாட்டு ஒத்துழைப்பாளர்களுடன் பல சுற்று சந்திப்புகளுக்குப் பிறகு இது உருவாக்கப்பட்டது," என்றார் அவர்.

"குட்டிகளுக்கு நான்கு வாரங்கள் ஆனதும் அவை தாயுடன் வெளியே வரத் தொடங்கின. இதன் காரணமாக வெப்பத்தின் தாக்கத்திற்கு ஆளாயின. அதன் பிறகு இந்த நிலை ஏற்பட்டது. அதற்கு முன் அவை நன்றாக விளையாடிக்கொண்டுதான் இருந்தன.”

ஆனால் நிபுணர்கள் இதை ஏற்கத் தயாராக இல்லை. இந்த முழு விவகாரத்திற்கும் யார் பொறுப்பு என்பது அடிமட்ட ஊழியர் மட்டத்தில் முடிவு செய்யப்பட வேண்டும் என்று வனவிலங்கு நிபுணர் அஜய் துபே கூறினார்.

வெயில் காரணமாக இந்தச் சம்பவம் நடந்தது என்று சொல்வது சரியல்ல என்றார் அவர்.

பிரதமர்  தொடங்கிய திட்டம் வெற்றிபெறுவதில் சிக்கலா?

பட மூலாதாரம், CHEETAH CONSERVATION FUND

"2020இல் சிவிங்கிப்புலிகளை இந்தியாவிற்கு கொண்டு வர உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதன் பிறகு 2020, 21 மற்றும் 22இல் பலமுறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் நமீபியாவுக்கும் தென்னாப்பிரிக்காவிற்கும் பயிற்சிக்காகச் சென்றனர். பலமுறை நிபுணர்கள் அங்கிருந்து இங்கு வந்தனர்,” என்று அஜய் துபே சுட்டிக்காட்டினார்.

சிவிங்கிப்புலியின் பெயரில் மூன்று ஆண்டுகளில் கோடிக்கணக்கான ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டினார். வெப்பம்தான் மரணத்திற்குக் காரணம் என்று எப்படிச் சொல்ல முடியும் என்று அஜய் துபே கேட்கிறார்.

"இனி மரணம் ஏற்படாத வகையில் பயிற்சி பெற்ற ஊழியர்கள் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்படுவது அவசியம்," என்று துபே கூறினார்.

ஜுவாலா என்ற பெண் சிவிங்கிப்புலி மார்ச் 27ஆம் தேதி குனோவில் நான்கு குட்டிகளை ஈன்றது. இதுகுறித்து தகவல் அளித்த மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்திர யாதவ், ஒட்டுமொத்த ஊழியர்களுக்கும் வாழ்த்து தெரிவித்தார். ஆனால் இந்த மகிழ்ச்சி நீண்ட காலம் நீடிக்கவில்லை.

பிரதமர்  தொடங்கிய திட்டம் வெற்றிபெறுவதில் சிக்கலா?

பட மூலாதாரம், CHEETAH CONSERVATION FUND

படக்குறிப்பு, சிவிங்கிப்புலிகள் தூங்கவைக்கப்பட்டு விமானத்தில் கொண்டுவரப்பட்டன.

3 சிவிங்கிப்புலிகள் ஏற்கெனவே உயிரிழப்பு

குட்டிகள் இறப்பதற்கு முன், மூன்று பெரிய சிவிங்கிப்புலிகளும் இறந்துள்ளன. முதலில், நமீபியாவில் இருந்து வந்த 'சாஷா' என்ற சிவிங்கிப்புலி மார்ச் 27 அன்று இறந்தது.

சிறுநீரக செயலிழப்பால் சிவிங்கிப்புலி இறந்ததாக அப்போது வனத்துறையினர் கூறினர்.

அதன் பிறகு, 'உதய்' ஏப்ரல் 23ஆம் தேதி காலமானது. 'உதய்' தென்னாப்பிரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட்டது.

மூன்றாவது மரணம் மே 9ஆம் தேதி நடந்தது. தென்னாப்பிரிக்காவில் இருந்து கொண்டுவரப்பட்ட 'தக்‌ஷா’ என்ற பெண் சிவிங்கிப்புலி இனச்சேர்க்கையின்போது ஏற்பட்ட மோதலில் உயிரிழந்தது.

இதன்போது, இரண்டு சிவிங்கிப்புலிகள் அதைக் கடுமையாகக் காயப்படுத்தின. பின்னர் அது உயிரிழந்தது.

பிரதமர்  தொடங்கிய திட்டம் வெற்றிபெறுவதில் சிக்கலா?

பட மூலாதாரம், TWITTER/NARENDRA MODI

சிவிங்கிப் புலிகள் எப்போது வந்தன?

கடந்த ஆண்டு, பிரதமர் நரேந்திர மோதியின் பிறந்த நாளையொட்டி, செப்டம்பர் 17ஆம் தேதி, நமீபியாவில் இருந்து 8 சிவிங்கிப்புலிகள் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டன. மோதிதான் அவற்றைத் திறந்துவிட்டார்.

அதன்பிறகு இரண்டாவது தொகுப்பில் 12 சிவிங்கிப் புலிகள் இந்த ஆண்டு பிப்ரவரி 18ஆம் தேதி தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்டு அவை குனோ தேசிய பூங்காவில் விடப்பட்டன.

நாட்டில் சிவிங்கிப்புலிகளை மீண்டும் குடியமர்த்தும் நோக்கில் 'புராஜெக்ட் சீட்டா' தொடங்கப்பட்டது. நாட்டில் சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பு சிவிங்கிப்புலி இனம் அழிந்துவிட்டது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: