காணொளி: வந்தே மாதரம் பாடல் குறித்து கேள்விப்பட்டிராத கதை
'வந்தே மாதரம்' இந்தியாவின் தேசியப் பாடலாவதற்கு முன், அது ஒரு போர் முழக்கமாகவே இருந்துள்ளது. அனைவரும் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.
நீங்கள் இதுவரை கேள்விப்பட்டிராத கதை இதோ..
1875ல் Bengal-ஐ சேர்ந்த பங்கிம் சந்திர சட்டர்ஜி எழுதிய ஒரு பாடல்தான், பின் சுதந்திர போராட்ட வீரர்களின் பேரணியில் ஒலிக்கும் முழக்கமாக மாறியது.
இந்தியாவை கடவுள் துர்கையாகவும், மக்களை அதன் குழந்தைகளாகவும் பாவித்து, இருளில் சூழ்ந்து துன்பப்படும் தாயாக நாட்டை சித்தரித்து, தன்னை காக்க குழந்தைகளை அழைக்குமாறு கற்பனை செய்திருப்பார்.
ரவீந்திரநாத் தாகூர் மெட்டமைத்துள்ளார்.
1905ஆம் ஆண்டு வங்காளப் பிரிவினையின்போது, மக்களின் கோபம் சக்திவாய்ந்த எதிர்ப்பு முழக்கமாக மாறியபோது, இந்தப் பாடல் முக்கியத்துவம் பெற்றது.
இன்று பெரும்பாலான இந்தியர்கள் அறிந்திருக்கும் மற்றும் ஆகஸ்ட் 15, ஜனவரி 26 தேதிகளில் இசைக்கப்படும் வெர்சன், 1952ஆம் ஹேமந்த் குமார் இசையமைத்து, லதா மங்கேஷ்கர் பாடியதாகும்.
1950ஆம் ஆண்டு ஜனவரி 24 அன்று ராஜேந்திர பிரசாத் வந்தே மாதரம் பாடலை இந்தியாவின் தேசிய பாடலாக அறிவித்தார்.
தற்போது நாடாளுமன்ற அவைகள் தேசிய கீதத்துடன் தொடங்கி, வந்தே மாதரம் பாடலுடன் நிறைவு பெறுகிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



