You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
டொமினிகன் குடியரசு: இடிந்து விழுந்த இரவுநேர கேளிக்கை விடுதி மேற்கூரை - 98 பேர் பலி
டொமினிகன் குடியரசு: இடிந்து விழுந்த இரவுநேர கேளிக்கை விடுதி மேற்கூரை - 98 பேர் பலி
பிரசுரிக்கப்பட்டது
டொமினிகன் குடியரசின் இரவு நேர கேளிக்கை விடுதி ஒன்றின் கூரை இடிந்து விழுந்ததில், குறைந்தது 98 பேர் பலியாகியுள்ளனர். மேலும், 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் தலைநகர் சாண்டோ டொமிங்கோவில் உள்ள ஜெட் செட் கேளிக்கை விடுதியில் பிரபல மெரெங்கு பாடகர் ரூபி பெரெஸின் இசை நிகழ்ச்சியின் போது இந்த விபத்து நடந்துள்ளது.
இந்த விபத்தின் போது நூற்றுக்கணக்கான மக்கள் விடுதியினுள் இருந்துள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு