"தேர்தல் பத்திரம் ரத்துக்கு வருத்தப்படுவார்கள்" - பிரதமர் மோதி இவ்வாறு கூறியது ஏன்?
தேர்தல் பத்திரம் குறித்த கேள்விக்கு பிரதமர் நரேந்திர மோதி சமீபத்தில் பதிலளித்துள்ளார்.
சமீபத்தில் இதுகுறித்து ஏஎன்ஐ செய்தி முகமைக்கு அவர் அளித்துள்ள பதிலில், தேர்தல் பத்திர திட்டத்தை ரத்து செய்யப்பட்டதற்காக பலரும் வருத்தப்படுவார்கள் என்று கூறியுள்ளார்.
தேர்தல் பத்திர திட்டத்தை ரத்து செய்தது நாட்டை முழுமையாக கருப்புப் பணத்தை நோக்கி தள்ளியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்கு நாங்கள் ஒரு வழியைத் தேடிக்கொண்டிருந்தோம். அந்த வழிதான் தேர்தல் பத்திரம். இது முழுமையான தீர்வு என ஒருபோதும் கூறவில்லை, எந்த அமைப்பும் 100 சதவீதம் சரியானதல்ல. ஆனால் அதில் உள்ள குறைபாடுகளை மேம்படுத்த முடியும் என்று கூறினார்.
“எனது அரசால் தொடங்கப்பட்ட தேர்தல் பத்திரங்கள் திட்டம், 'கறுப்புப் பணத்தை' எதிர்த்துப் போராடியது. “தேர்தல் பத்திரங்களால் உங்களுக்கு பணம் வருகிறது என்றால், அதனை எந்த நிறுவனம் கொடுத்தது? எப்படி கொடுத்தார்கள்? எங்கே கொடுத்தார்கள்?... என பலவற்றையும் ஆதாரபூர்வமாக அறிந்துகொள்ளலாம். அதனால் தான் சொல்கிறேன். இது ரத்து செய்யப்பட்டதற்காக பின்னால் வருந்துவார்கள்” என நரேந்திர மோதி தெரிவித்தார்.
முழு தகவல்களை இந்த காணொளியில் காணலாம்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



