'நோன்பு இருப்பது போல என்னால் நடிக்க முடியவில்லை' - மாதவிடாய் நாட்களில் கேலிக்குள்ளாகும் முஸ்லிம் பெண்கள்

காணொளிக் குறிப்பு, 'நோன்பு இருப்பது போல என்னால் நடிக்க முடியவில்லை' - மாதவிடாயால் கேலிக்குள்ளாகும் பெண்கள்
'நோன்பு இருப்பது போல என்னால் நடிக்க முடியவில்லை' - மாதவிடாய் நாட்களில் கேலிக்குள்ளாகும் முஸ்லிம் பெண்கள்
பிரசுரிக்கப்பட்டது

ரமலான் மாதத்தில், மாதவிடாய் ஏற்படும் பெண்கள் நோன்பு இருக்கத் தேவையில்லை என்றாலும், நோன்பு இருக்காமல் இருப்பதற்காக கேலிக்கு உள்ளாவதாக பல பெண்கள் ஆன்லைனில் தெரிவித்து வருகின்றனர்.

டிக்டாக் சமூக ஊடகத்தில் இதுதொடர்பாக பதிவிட்டுள்ள ஹனன் பத்லஃபா, ரமலான் நாட்களின் நடைபெறும் இந்த சம்பவம் குறித்து அரபு நாடுகளில் யாரும் பேசவதில்லை என்கின்றார்.

நோன்பு இருக்க தேவையில்லாத நிலையில் மற்றவர்களை போல அதிகாலையிலேயே எழுந்து, நோன்பு இருப்பது போல நடிக்க வேண்டியுள்ளது என்று பலரும் கூறுகின்றனர்.

ரமலான் காலத்தில் மாதவிடாய் வந்ததை மறைக்க பல முயற்சிகளை செய்ய வேண்டி உள்ளது, என்கிறார் பாத்திமா அக்லக்.

"என் குடும்பத்தினரே என்னை அவமானமாக கருதுகின்றனர். வீட்டில் ஆண்கள் இல்லாத நேரத்தில் ஒளிந்திருந்து சாப்பிட சூழல் வீட்டில் இருக்கிறது."

மாதவிடாய், மூடநம்பிக்கை

பட மூலாதாரம், Getty Images

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: