கத்தார் உலகக் கோப்பை: வானத்தில் வட்டமடித்து பிரேசில் வீரர் அடித்த சூப்பர் கோல்

காணொளிக் குறிப்பு, வானத்தில் வட்டமடித்து பிரேசில் வீரர் அடித்த சூப்பர் கோல்
கத்தார் உலகக் கோப்பை: வானத்தில் வட்டமடித்து பிரேசில் வீரர் அடித்த சூப்பர் கோல்
பிரசுரிக்கப்பட்டது

கத்தார் கால்பந்து உலகக் கோப்பை போட்டியில் செர்பிய அணிக்கு எதிராக பிரேசில் வீரர் ரிச்சர்லிசன் அடித்த ஒரு கோல் கால்பந்து ரசிகர்களாலும் நிபுணர்களாலும் மிகச் சிறந்த கோல்களுள் ஒன்றாகப் பாராட்டுப் பெற்றிருக்கிறது.

தலைக்கு மேல் சுழன்று கொண்டிருந்த பந்தை கிட்டத்தட்ட தலைகீழாகவே சுழன்று காலால் உதைத்து கோலுக்குள் திணித்த அற்புதத்தை கால்பந்து உலகம் இப்போது திரும்பத் திரும்ப ஓடவிட்டுப் பார்த்துக் கொண்டிருக்கிறது.

செல்போன்கள், கணினிகள், தொலைக்காட்சித் திரைகளில் அந்தக் காட்சியை கால்பந்து ரசிகர்கள் ரசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

கத்தார் கால்பந்து உலகக் கோப்பை

பட மூலாதாரம், Getty Images

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: