இஸ்ரேல்: காசாவில் காணாமல் போன தந்தையை தேடும் மகள்
பாலத்தீன அமைப்பான ஹமாஸின் தாக்குதலில் இஸ்ரேலில் குறைந்தது 1,000 பேர் கொல்லப்பட்டனர், அதேநேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் 700-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதில், கடந்த சனிக்கிழமை அன்று காசா பகுதிக்கு சென்றிருந்த தனது தந்தை கிதியோனியை தேடி வருகிறார் லயர் பாபானி. அவர் கடைசியாக தனது தந்தையிடம் பேசியபோது, அங்கு துப்பாக்கிசூடு சத்தமும், ராக்கெட் சத்தமும் கேட்டதாக அவர் தெரிவித்தார்.

அதேபோல, காசா பகுதியில் உள்ள இசை விழாவிற்கு சென்றிருந்த தனது மகள் அமித் லஹாவியை காணவில்லை என தேடி வருகிறார் ஜாக்கி லஹாவ். காணாமல் போனவர்கள் குறித்து எந்த ஒரு நம்பத்தகுந்த தகவலையும் யாரும் தருவதில்லை என அவர் குற்றம்சாட்டினார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



