இரான்: 65 பேர் பலியான துறைமுக வெடி விபத்தின் ட்ரோன் காட்சிகள்

இரான்: 65 பேர் பலியான துறைமுக வெடி விபத்தின் ட்ரோன் காட்சிகள்
பிரசுரிக்கப்பட்டது

சனிக்கிழமை (ஏப்ரல் 26) இரானின் ஷஹீத் ராஜாயீ துறைமுக வெடிப்பின் கோரத்தைக் காட்டும் ட்ரோன் வீடியோ இது.

இந்த விபத்தில் குறைந்தது 65 பேர் பலியாகியுள்ளதாக இரானிய அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இந்த குண்டு விபத்தால் பல கிலோ மீட்டர் தூரத்திலிருந்த வீடுகளின் ஜன்னல்கள் உடைந்தன. வெடி விபத்து ஏற்பட்ட 50 கிலோமீட்டர் தூரத்தில் இருந்தவர்களும் விபத்தின் தாக்கத்தை உணர்ந்ததாகத் தெரிவித்தனர்.

ரசாயனங்களின் கரும்புகை அருகில் இருக்கும் நகரங்களைச் சூழ்ந்துள்ளதால், மறு அறிவிப்பு வரும்வரை மக்கள் வீட்டிற்குள் இருக்குமாறு சுகாதார அமைச்சகத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 27) இரவு வரை மீட்புப் பணிகள் நடந்து வந்ததாக இரானிய அரசு ஊடகங்கள் தெரிவித்தன.

கடல்சார் ஆபத்து ஆலோசனை நிறுவனமான ஆம்ப்ரி இன்டெலிஜென்ஸ் (Ambrey Intelligence), "பலிஸ்டிக் ஏவுகணைகளில் பயன்படுத்தத் திட்டமிடப்பட்ட திட எரிபொருள் கொண்ட சரக்கினை தவறாக கையாண்டதும், விபத்துக்கு முன் கண்டைனர்களுக்கு இடையே தீப்பற்றியதுமே" வெடி விபத்துக்கான காரணம் என கருதுவதாகக் கூறியுள்ளது.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு