அழிவின் விளிம்பில் உள்ள பட்டாம்பூச்சிகளைப் பாதுகாக்க இந்த பெண் என்ன செய்கிறார்?

காணொளிக் குறிப்பு, பாகிஸ்தானில் அழிவின் விளிம்பில் உள்ள பட்டாம்பூச்சிகளை ஷிரீன் வளர்த்து வருகிறார்.
அழிவின் விளிம்பில் உள்ள பட்டாம்பூச்சிகளைப் பாதுகாக்க இந்த பெண் என்ன செய்கிறார்?
பிரசுரிக்கப்பட்டது

“பட்டாம்பூச்சிகள் என்பவை வெறும் பூச்சிகள் அல்ல, அவை சுற்றுச்சூழலுக்கு பெருமளவில் உதவுகின்றன.” என்கிறார் பாகிஸ்தானின் கராச்சியைச் சேர்ந்த இயற்கை ஆர்வலரான ஷிரீன்.

பாகிஸ்தானில் அழிவின் விளிம்பில் உள்ள பட்டாம்பூச்சிகளை வளர்த்து வருகிறார் ஷிரீன். கடந்த 20 வருடங்களாக இதைச் செய்து வருவதாக அவர் கூறுகிறார். 2016இல் ஒரு பட்டாம்பூச்சிகளுக்கான ஒரு கிளப்பை முன்னெடுத்தார் ஷிரீன்.

இக்கிளப்பிற்கு கராச்சியில் உள்ள பள்ளிகளின் மாணவர்கள் அடிக்கடி வருகிறார்கள். இந்த கிளப் குழந்தைகளுக்கு மிகவும் அவசியம் என்கிறார் ஷிரீன்.

“இதனால் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு, புரிதல் அவர்களுக்கு ஏற்படும். அது எதிர்கால தலைமுறையினருக்கு மிகவும் முக்கியம். சுற்றுச்சூழலை மேம்படுத்தும் விஷயங்களை இவர்கள் இங்கு கற்றுக்கொள்கிறார்கள்.” என்கிறார் அவர்.

கூடுதல் விவரம் காணொளியில்...

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)