'அமெரிக்காவின் முகத்தில் அறைந்தோம்' - இரான் அதிஉயர் தலைவர் கூறியது என்ன?

காணொளிக் குறிப்பு,
'அமெரிக்காவின் முகத்தில் அறைந்தோம்' - இரான் அதிஉயர் தலைவர் கூறியது என்ன?
பிரசுரிக்கப்பட்டது

இரானின் அதிஉயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி பேசுகையில், "மாபெரும் இரானிய தேசத்துக்கு வாழ்த்துகள். மக்களுக்கு சில முக்கியமான வாழ்த்துகளை கூற விரும்புகிறேன். முதலில், பிழையான ஸியோனிச ஆட்சியை வென்றதற்கு வாழ்த்துகள், அது என்ன கூச்சலிட்டாலும், என்ன கூறினாலும், இஸ்லாமிய குடியரசு கொடுத்த அடியில் ஸியோனிச ஆட்சி கிட்டத்தட்ட சரிந்துவிட்டது.

அமெரிக்க அதிபர் அசாதாரண வழிகளில் நிகழ்வுகளை மிகைப்படுத்தி கூறினார். அவருக்கு இந்த மிகைப்படுத்தல் தேவைப்பட்டது. இந்த வார்த்தைகளைக் கேட்ட எவரும் இந்த வார்த்தைகளுக்குப் பின்னால் மற்றொரு உண்மை இருப்பதைப் புரிந்துகொண்டுள்ளனர்: அவர்கள் நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டனர், மேலும் அவர்கள் விரும்பிய இலக்கை அடையவில்லை.

இஸ்லாமிய குடியரசு அமெரிக்காவின் முகத்தில் பலமாக அறைந்தது. அது, பிராந்தியத்தில் உள்ள முக்கிய அமெரிக்க தளங்களில் ஒன்றான அல்-உடெய்ட் விமானத் தளத்தைத் தாக்கி சேதப்படுத்தியது." என தெரிவித்தார்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு