திண்டுக்கல் தீ விபத்து: உயிர் பிழைத்தவர்கள் கூறுவது என்ன? பிபிசி கள ஆய்வு

திண்டுக்கல் தீ விபத்து: உயிர் பிழைத்தவர்கள் கூறுவது என்ன? பிபிசி கள ஆய்வு
பிரசுரிக்கப்பட்டது

திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 வயது பெண் குழந்தை உள்பட ஆறு பேர் உயிரிழந்துள்ளதாக, அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

மருத்துவமனையில் தீ தடுப்பு நடவடிக்கைகள் இல்லாததே உயிரிழப்புக்குக் காரணம் என பாதிக்கப்பட்டவர்கள், குற்றம் சுமத்துகின்றனர்.

மருத்துவமனையில் விதிமீறல் உள்ளதா என்பது குறித்து காவல்துறை அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகக் கூறுகிறார், அமைச்சர் மா.சுப்ரமணியன். திண்டுக்கல் மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டது எப்படி? சம்பவம் நடந்தபோது நேரில் பார்த்தவர்கள் கூறுவது என்ன?

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)