ஆமதாபாத் விமான விபத்து: ஏர் இந்தியா விமானியின் உடலுக்கு மும்பையில் அஞ்சலி

ஆமதாபாத் விமான விபத்து: ஏர் இந்தியா விமானியின் உடலுக்கு மும்பையில் அஞ்சலி
பிரசுரிக்கப்பட்டது

ஆமதாபாத்தில் விழுந்து நொறுங்கிய ஏர் இந்தியா விமானத்தின் விமானி சுமித் சபர்வால் உடல் மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.

56 வயதான சுமித் சபர்வாலின் தந்தை புஷ்கராஜ் சபர்வால் தனது மகனுக்கு கண்ணீர் மல்க பிரியா விடை அளித்தார்.

கடந்த ஜூன் 12ஆம் தேதி நடந்த விமான விபத்தில் விமானத்தில் பயணித்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்தனர். அதில் சுமீத் சபர்வாலும் ஒருவர். இதுவரை 83 பேரின் உடல்கள் குடும்பங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு