'ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை இந்தியா குறைத்துக் கொண்டது' - டிரம்ப்

காணொளிக் குறிப்பு, ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா குறைத்துக் கொண்டது : டிரம்ப்
'ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை இந்தியா குறைத்துக் கொண்டது' - டிரம்ப்
பிரசுரிக்கப்பட்டது

இந்திய பிரதமர் நரேந்திர மோதியிடம் தான் பேசியதாகவும், இருவருக்கும் இடையில் நல்ல உறவு இருப்பதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்திய பிரதமர் ரஷ்ய-யுக்ரேன் போர் முடிவுக்கு வர வேண்டும் என்று விரும்புவதாகவும், ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை குறைத்துக் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே இது போன்ற கருத்தை டிரம்ப் தெரிவித்து, இந்தியா அதை மறுத்திருந்த நிலையில், தற்போது மீண்டும் இது குறித்து டிரம்ப் பேசியுள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு