அமெரிக்காவில் நில நடுக்கம் - மக்கள் அதிர்ச்சி

காணொளிக் குறிப்பு, ஆகஸ்ட் 12ம் தேதி அன்று 4.4 என்ற அளவில் கலிஃபோர்னியாவில் நில நடுக்கம் உணரப்பட்டது
அமெரிக்காவில் நில நடுக்கம் - மக்கள் அதிர்ச்சி
பிரசுரிக்கப்பட்டது

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் ஆகஸ்ட் 12ம் தேதி அன்று ஏற்பட்ட நிலநடுக்கம் மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்தது.

உள்ளூர் நேரப்படி மதியம் 12.20 மணிக்கு 4.4 என்ற அளவில் இந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இதில் மக்கள் யாருக்கும் பாதிப்பு இல்லை என்பதை உறுதி செய்துள்ளது லாஸ் ஏஞ்சல்ஸ் தீயணைப்பு துறை.

வீடுகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்  (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)