காணொளி: சிறுவனை கடித்த குள்ளநரி; காப்பாற்றிய தாய்
காணொளி: சிறுவனை கடித்த குள்ளநரி; காப்பாற்றிய தாய்
பிரசுரிக்கப்பட்டது
கேரளாவில் ஒரு சிறுவனை குள்ளநரி கடித்த காட்சி இது.
கண்ணூர் மாவட்டத்தில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதியில் சுற்றித் திரிந்த குள்ளநரி, வீட்டின் வெளியே விளையாடிக்கொண்டிருந்த சிறுவனை கடித்தது.
அழுகுரலை கேட்டு வந்த சிறுவனின் தாய் குள்ளநரியை துரத்தி குழந்தையை காப்பாற்றினார்.
இதேபோல, இந்த மாவட்டத்தில் குள்ளநரி கடித்து 10 பேர் காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குள்ளநரியை பிடிக்கக்கோரி வனத்துறை அதிகாரிகளிடம் குடியிருப்புவாசிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



