காணொளி: இந்தியா மீது வரி போர்; ஐரோப்பிய நாடுகளையும் அழைக்கும் அமெரிக்கா
காணொளி: இந்தியா மீது வரி போர்; ஐரோப்பிய நாடுகளையும் அழைக்கும் அமெரிக்கா
பிரசுரிக்கப்பட்டது
ரஷ்ய எண்ணெய் வாங்குவதாக அமெரிக்கா இந்தியாவை குறிவைத்து வரும் நிலையில், பிற நாடுகளும் அழுத்தம் தர வேண்டும் என அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசண்ட் மறைமுகமாக கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசும்போது, ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு எதிராக கூடுதல் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
அந்த பட்டியலில் இந்தியாவும் முக்கிய நாடாக உள்ளது. இதைக் காரணம் காட்டி, அமெரிக்கா இந்தியாவுக்கு ஏற்கனவே 25% வரி விதித்தது.
குறிப்பாக, ஐரோப்பிய ஒன்றியமும் இதில் இணைந்தால், ரஷ்ய பொருளாதாரம் முற்றிலும் சிதைந்து விடும் என அவர் பேசியிருக்கிறார்.
முழு விவரம் காணொளியில்..
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



