அமெரிக்கா: பழுதான மீன்பிடிப் படகு, நடுக்கடலில் சிக்கிய கேப்டனை மீட்ட கடலோர காவல் படை

காணொளிக் குறிப்பு,
அமெரிக்கா: பழுதான மீன்பிடிப் படகு, நடுக்கடலில் சிக்கிய கேப்டனை மீட்ட கடலோர காவல் படை
பிரசுரிக்கப்பட்டது

அமெரிக்காவில் கடும் காற்று, அலைக்கு மத்தியில் கடலில் தவித்தவர் வியாழனன்று மீட்கப்பட்ட காட்சி இது. இவர் மீன்பிடிப் படகின் கேப்டன் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

படகு பழுதான நிலையில், இவரும் இவரது குழுவும் திங்கட்கிழமை மீட்கப்பட்டனர். பிறகு படகைப் பழுது பார்க்க மீண்டும் கடலுக்குள் சென்ற இவர் திரும்பி வரவில்லை என்று கடலோர காவல் படைக்கு புதன்கிழமை தகவல் கிடைத்தது.

மில்டன் சூறாவளி நெருங்கியதால் உயிர் காக்கும் உடை அணிந்து பாதுகாப்பாக இருக்குமாறு இந்த நபரை அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

இருப்பினும், புதன்கிழமை மாலை தகவல்தொடர்பு துண்டிக்கப்பட்டது. இந்த நிலையில், வியாழக்கிழமை இவர் உயிருடன் மீட்கப்பட்டார். 120 -144 கி.மீ வேகத்தில் வீசிய காற்றை இவர் எதிர்கொண்டிருந்திருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்  (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)