ஆந்திரா: கணிதத்தை புதுமையான முறையில் கற்பிக்கும் அரசுப் பள்ளி ஆசிரியை

காணொளிக் குறிப்பு, ஆந்திரா: கணிதத்தை புதுமையான முறையில் கற்பிக்கும் அரசுப்பள்ளி ஆசிரியை
ஆந்திரா: கணிதத்தை புதுமையான முறையில் கற்பிக்கும் அரசுப் பள்ளி ஆசிரியை
பிரசுரிக்கப்பட்டது

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் உள்ள மொரைப்பல்லெ கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப பள்ளி, இப்போது நாடு முழுவதும் கவனம் ஈர்த்துள்ளது. இதற்கு இப்பள்ளி ஆசிரியர் நாகலட்சுமி மேற்கொண்ட சில முன்னெடுப்புகள்தான் காரணம்.

இந்திய மனிதவள அமைச்சகம் 2022-2023ஆம் ஆண்டில் நடத்திய ‘வித்யா அம்ரித் மஹோத்சவ்’ நிகழ்வில், ஆசிரியர் நாகலட்சுமி உருவாக்கிய இந்த புதுமையான ’அபாகஸ்’ முறை முதல் பரிசை பெற்றது.

சுவர்களில் உள்ள கிரில் கம்பிகளில் பல வடிவங்கள் மற்றும் வண்ணங்களில் பல்வேறு கணித முறைகள் நிரந்தரமாக அமைக்கப்பட்டுள்ளன. வட்டம், செவ்வகம், முக்கோணம் போன்ற கணித வடிவங்கள் பள்ளி வளாகம், வகுப்பறைகள் மற்றும் அங்குள்ள மரங்களின் அடியில் காணப்படுகின்றன. மாணவர்களிடம் கணிதம் குறித்த பயத்தை நீக்குவதற்காக ஆசிரியர் நாகலட்சுமி இதனை செய்துள்ளார்.

இதன் மூலம் எப்படி தேசிய அளவில் அங்கீகாரம் கிடைத்தது என்பதை விளக்குகிறார் நாகலட்சுமி.

ஆந்திர அரசின் ‘நாடு-நேடு’ எனும் முன்னெடுப்பில் பள்ளியை புதுப்பிக்கும் திட்டத்தின் கீழ் பள்ளிகளில் இந்த வடிவங்கள் அமைக்கப்பட்டன. எந்த வடிவங்கள் எங்கு, எப்படி அமைய வேண்டும் என்பதை ஆசிரியர் நாகலட்சுமியே வரைந்து விளக்கியுள்ளார்.

இந்த புதிய முயற்சி காரணமாக, பெற்றோர்கள் சிலர் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளுக்கு அனுப்புவதை நிறுத்திவிட்டு அரசுப்பள்ளியில் சேர்த்து வருகின்றனர்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)