ரயில் விபத்தில் இருந்து யானைகளை பாதுகாக்கும் செயற்கை நுண்ணறிவுக் கேமரா

காணொளிக் குறிப்பு, ரயில் மோதி யானைகள் உயிரிழப்பதை தடுக்க AI கேமராக்கள் மூலம் புதிய முயற்சி
ரயில் விபத்தில் இருந்து யானைகளை பாதுகாக்கும் செயற்கை நுண்ணறிவுக் கேமரா
பிரசுரிக்கப்பட்டது

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் உதவியுடன் இயங்கும் கேமராக்கள் ரயில் மோதி யானைகள் உயிரிழப்பதை தடுக்க பயன்படுகிறது. கோவை அருகே மதுக்கரை காப்புக்காடு பகுதியில் இவை நிறுவப்பட்டுள்ளன.

2008ஆம் ஆண்டு முதல் இன்றுவரை கோவையில் ரயில் மோதி, 11 யானைகள் பரிதாபமாக மரணித்துள்ளன.

இந்த தொழில்நுட்பத்தின் உதவியுடன் கட்டுப்பாட்டு அறையில் இருந்து யானை உலவுவது குறித்து 388 முறை ரயில்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கோவை, தருமபுரி, ஓசூர் பகுதிகளில் மேலும் 5 கட்டுப்பாட்டு அறைகளை உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளது.

தயாரிப்பு: ச.பிரசாந்த்

படத்தொகுப்பு: மதன்

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)