மணிப்பூர் வன்முறையால் வீடு, உடைமைகளை இழந்த மக்கள் - களத்தில் பிபிசி

காணொளிக் குறிப்பு, மணிப்பூர் வன்முறை: வீட்டை இழந்து வீதியில் மக்கள்- களநிலவரம்
மணிப்பூர் வன்முறையால் வீடு, உடைமைகளை இழந்த மக்கள் - களத்தில் பிபிசி
பிரசுரிக்கப்பட்டது

சொந்த வீட்டிலிருந்து வெளியேறிய வேதனை பசந்தா சிங்கின் கண்களில் தெரிகிறது.

பசந்தா தமது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் சைகுல் பகுதியில் வசித்து வந்தார். அங்கு வாடகைக்கு கடை நடத்தி வந்தார். சமீபத்தில் மணிப்பூரில் வன்முறை வெடித்தபோது, தனது உயிரையும், தன் குடும்பத்தினரின் உயிரையும் காப்பாற்றிக்கொள்ள, வீட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டது.

இம்பாலில் உள்ள பாங்கேய் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக முகாம், பல நாட்களாக பசந்தா சிங் குடும்பத்தின் வீடாக மாறியுள்ளது.

உயிர் பயத்தில் வீட்டை விட்டு வெளியேறியபோது, அவர்கள் அணிந்திருந்த ஆடைகளும், கொண்டு வந்த சில நகைகளும் மட்டுமே தற்போது அவர்களின் சொத்துகளாக உள்ளன (முழு தகவல் காணொளியில்)

மணிப்பூர் வன்முறை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: